சோதிக்காதீங்கடா.. கடைக்கு பொருள் வாங்க போய் சிக்கிய கஸ்டமர்...

13 ஆடி 2025 ஞாயிறு 19:24 | பார்வைகள் : 118
ஒரு புத்தக கடைக்குள் சென்ற ஒருவர் பிரச்சனைகளை தீர்க்க எதாவது புக் இருக்கிறதா என கேட்டுள்ளார்.
விற்பனையாளர்: கண்டிப்பாக சார்.. உங்களின் 50% பிரச்சனைகளை தீர்க்கும் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்: 50% மட்டும்தானா?
விற்பனையாளர்: அப்போ 2 புத்தகமா வாங்கிக் கொள்ளுங்கள் சார்..
வாடிக்கையாளர்: !!! ஹார்ட்வேர் கடைக்குள் நுழைந்த ஒரு வாடிக்கையாளர்,
வாடிக்கையாளர்: சார், ஒரே வெட்டில் பெரிய மரத்தையும் சாய்க்க கூடிய ரம்பம் இருக்கிறதா?
விற்பனையாளர்: மன்னிக்கவும்.. எங்களது கடையில் ஆச்சர்யங்கள் விற்கப்படுவதில்லை. நன்றாக வெட்ட கூடிய ரம்பம் மட்டுமே விற்கிறோம்.
வாடிக்கையாளர்: !!!
வாடிக்கையாளர்: இந்த பொருளை பற்றி எனக்கு பெரிதாக கருத்து இல்லை. உங்களால் இதற்கு உத்தரவாதம் தர முடியுமா?
விற்பனையாளர்: கண்டிப்பாக சார்.. நிச்சயமாக அது உங்களுக்கு பிடிக்கும், என்னால் நீங்கள் வாங்கும் வரை இந்த உத்தரவாதம் மட்டுமே கொடுக்க முடியும்.
வாடிக்கையாளர்: !!!
விற்பனையாளர்: சார்.. இந்த பொருள் மிகவும் சிறப்பானது.
வாடிக்கையாளர்: எதை வைத்து சொல்கிறீர்கள்?
விற்பனையாளர்: விலை அதிகமாக இருக்கும்போதே தெரிய வேண்டாமா சார்.. கண்டிப்பாக சிறப்பானது தான்.
வாடிக்கையாளர்: !!!