Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : தேசிய நாளுக்காக அழைத்துவரப்பட்ட இராணுவ வீரர் பலி!!

பரிஸ் : தேசிய நாளுக்காக அழைத்துவரப்பட்ட இராணுவ வீரர் பலி!!

13 ஆடி 2025 ஞாயிறு 21:10 | பார்வைகள் : 2137


பரிசில் நாளை இடம்பெற உள்ள தேசிய நாளுக்காக அழைத்துவரப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் மேம்பாலம் ஒன்றில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

’பிரெஞ்சு இராணுவ கல்லூரி’யைச் சேர்ந்த 32 வயதுடைய Antoine Alix   எனும் வீரர் கடந்த ஜூலை 12 ஆம் திகதி  Guer (Morbihan) நகரில் இருந்து பரிசுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் நாளை காலை இடம்பெற உள்ள இராணுவ அணிவகுப்பில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜுலை 13 ஆம் திகதி அதிகாலை 3.30 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

18 ஆம் வட்டாரத்தில் உள்ள மேம்பாலம் ஒன்றில் இருந்து Montmartre கல்லறைத்தோட்டடத்தை பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென அவர் 15 மீற்றர் உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். வெறுமையான கொன்கிரீட் நிலத்தில் விழுந்து படுகாயமடைந்து அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சடலம் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்