Aubervilliers: பேருந்து மோதியதில் பெண் ஒருவர் மரணம்!

13 ஆடி 2025 ஞாயிறு 23:17 | பார்வைகள் : 2479
ஓபெர்வில்லியஸ் (Aubervilliers) பகுதியில் நடந்த விபத்தில், வீதியை திடீரென கடக்க முயன்ற பெண் ஒருவர் பஸ்சால் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை Quatre-Chemins சந்தியில் திடீரென சாலையை கடக்க முயன்ற போது பஸ்ஸின் முன்பக்கத்தில் மோதி, அந்த பெண் பஸ்சின் அடியில் இழுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சிகள் பலர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர், ஆனால் அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. மீட்புப் படையினர் வந்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் வீடில்லாத பெண் எனக் கூறப்படுகிறது.
பஸ் ஓட்டுனர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார். அவரது மது மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள் எதிர்மறையாக இருந்தன. அவர் மருத்துவமனைக்கு அதிர்ச்சி நிலையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
RATP நிறுவனம் விபத்தில் ஏற்பட்ட துயரத்தை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோருக்காக உதவி குழுவை செயல்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.