இன்று ஜூலை 14 - தேசிய நாள் நிகழ்வுகளின் முழு விபரங்கள்!!

14 ஆடி 2025 திங்கள் 03:56 | பார்வைகள் : 1106
இன்று ஜூலை 14, பிரான்சின் 236 ஆவது தேசிய நாள்.
சோம்ப்ஸ்-எலிசேயில் (Champs‑Élysées) பல ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காலை 9.55 மணிக்கு தேசிய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
மொத்தமாக 7,000 பேர் இதில் பங்கேற்க உள்ளனர். 102 விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகளும், 200 குதிரைகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பெய்ரூ இந்தோனேசிய ஜனாதிபதி Prabowo Subianto உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இவ்வருட தேசிய நாள் நிகழ்வுகள் இந்தோனேசிய-பிரான்ஸ் நட்புறவை பாராட்டும் விதத்தில் இடம்பெற உள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 450 இராணுவத்தினர் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
காலை 6 மணி முதல் France 2, TF 1, LCI போன்ற தொலைக்காட்சிகளில் நேரலையாக நிகழ்வுகளை பார்வையிட முடியும்.
அதேவேளை, இன்று இரவு இசைநிகழ்ச்சிகள், வானவேடிக்கைகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வானவேடிக்கைகளுக்காக 1,000 ட்ரோன்களை பயன்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புக்காக பரிசில் 11,500 பாதுகாப்பு படையினரும் நாடளாவிய ரீதியில் 54,000 பாதுகாப்பு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.