பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து

14 ஆடி 2025 திங்கள் 07:13 | பார்வைகள் : 240
பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி 4 மணிக்கு நெதர்லாந்து நோக்கி புறப்பட்ட விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து அறிந்த பொலிஸார், தீயணைப்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானத்தில் பயணித்தது எத்தனைபேர்?, விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
விமான விபத்துக்குப் பின்னர் லண்டன் சவுத்எண்ட் விமான நிலையம் மூடப்பட்டதோடு, அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.