பெண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம்..
10 மாசி 2022 வியாழன் 09:11 | பார்வைகள் : 10109
நாம் எல்லோருமே ஆரோக்கியமாக இருக்கவும், உடல் கட்டுக்கோப்பாக இருக்கவும் விரும்புவோம். இது நாம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நன்றாக இருப்பதற்கு அவசியமாகிறது. குறிப்பாக, பெண்கள் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் மெனக்கெடுவார்கள். ஆனால், உங்கள் தினசரி உடற்பயிற்சிகளையும் தாண்டி, உடல் எடை கூடிக்கொண்டே செல்வது, உடனடியாக கவனித்து, மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். எதிர்பாராத விதமாக, அபரிமிதமாக எடை கூடுவதற்கான பொதுவான காரணங்களை இங்கே நாங்கள் சொல்கிறோம்:
1. தைராய்ட் என்பது நம் உடலில் பட்டாம்பூச்சி வடிவிலிருக்கும் ஒரு சுரப்பி ஆகும். இது சரிவர வேலை செய்யாதபோது உடல் எடை கூடிவிடுகிறது. உயர் நிலை தைராய்ட் உள்ளவர்களுக்கு, உடலில் வளர்சிதை மாற்றங்கள் குறைவதால், உடலில் சேரும் உணவை எரிசக்தியாக மாற்றும் செயல்பாடு நின்றுபோய் உடல் எடை அபரிமிதமாக கூடுகிறது.
2. மாதவிடாய், பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் நின்றுபோய்விடும். இந்த சமயம் பெண்களுக்கு மிகுந்த சங்கடங்களை தரும் சமயமாகும். மாதவிடாய் நிற்பது என்பது, பெண்கள் கருத்தரிக்கும் சக்தியின்றி போவதைக் குறிக்கும். பொதுவாக பெண்களுக்கு இந்த சமயத்தில் இரண்டு முதல் நான்கு கிலோ எடை கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. (சிலருக்கு இது அதிகமாகவும் இருக்கக்கூடும்) மாதவிடாய் சமயத்தில் பெண்மைச்சுரப்பிகள் உடலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு வழிவகுப்பதால், கட்டுப்படில்லாமல் உடல் எடை கூடுகிறது. பெண்மை சுரப்பிகளைத்தவிர, மற்ற சில சுரப்பிகளும், உட்சுரப்பு நீர் சமநிலையிலில்லாத காரணத்தால், எடை கூடுவதற்கு காரணமாகிறது. உதாரணமாக, லெப்டின் என்ற சுரப்பி, கணையத்திலிருந்து, உடலில் சர்க்கரை அளவை நிர்ணயிக்கும் இன்சுலின் சுரக்க உத்தரவிடுமாறு மூளைக்கு விண்ணப்பிக்கிறது.
3. மன அழுத்தத்தநீக்கிகளாலும் கூட பொதுவாக எடை கூடும். மன அழுத்த நோயே, உடல் எடை அதிகமாகக் காரணமாகி விடுகிறது.
4 .கர்ப்பப்பை புற்றுநோய், உடல் எடையை கூட்டும் தன்மை உடையது. பெண்கள் உடற்பருமனால் அவதிப்படும்போது, அவர்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்கள் உடல் எடை அதிகமாகிக்கொண்டே போனால், உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்வது சிறந்தது.
5. பிஸிஓடி என்றழைக்கப்படும் பாலிசைஸ்டிக் ஓவரியன் நோய், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றக் காரணமாகிறது. இவை, பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் செய்து, அவர்களின் மகப்பேற்று சக்தியியனை பாதிக்கிறது. அதனால், உடல் எடை கூடுவதை கட்டுப்படுத்த முடியாமல் போய், பெண்களுக்கு மிக தொந்தரவாக அமைகிறது.
6. வாயுக்கோளாறு மற்றும் அஜீரணங்கள், நாம் உண்ணும் உணவு செரிக்காமல் போய், பல பிரச்சினைகள் தோன்றக் காரணமாகிறது என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து அதிகமில்லாத, கொழுப்பு நிறைந்த பண்டங்களை உண்பதாலும், தேவையான அளவு நீர் பருகாததினாலும், மலச்சிக்கல் உண்டாகி, உடல் எடை கூட வழிவகுக்கிறது.
7. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளினாலும், சர்க்கரை மற்றும் உப்பை அதிக அளவில் உட்கொள்வதாலும், உடலில் நீர் தங்கிவிடுகிறது. இதுவும் உடல் எடை கூட ஒரு காரணமாகிறது.
8. ஆஸ்மா, ஆர்த்ரிடிஸ் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு பொதுவாக அளிக்கப்படும் ஊக்கிகளால், பசியின்மை ஏற்பட்டு உடல் எடை கூடுகிறது. மன அழுத்தம் மற்றும் படபடப்பு சம்பந்தப்பட்ட குஷன் சின்ட்ரோம், நமது உடலின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும், கோர்டிஸால் என்னும் சுரப்பியினை மந்தப்படுத்தி, உடல் எடை கூட வழி செய்கிறது.