தேசிய நாள் நிகழ்வுகளுக்காக - உச்சக்கட்ட பாதுகாப்பு !!

14 ஆடி 2025 திங்கள் 08:20 | பார்வைகள் : 676
இன்னும் சொற்ப நேரத்தில் சோம்ஸ்-எலிசேயில் தேசிய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. இதற்காக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
காலை 6 மணியில் இருந்து மாலை 3 மணி வரை இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Place de la Concorde பகுதியில் இருந்து Rue de Castiglione வீதியில் இருந்து Boulevarad Malesherbes - Rue de Penthievre - Rue de Ponthieu - Aveneu des Champs-Elysees - Place Charles de-Gulle - Rue Francois வரை உள்ள சுற்றுப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தோடு அப்பகுதியை சூழ உள்ள பல மெற்றோ நிலையங்களும், சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன.
காவல்துறையினர், ஜொந்தாமினர், இராணுவத்தினர், அதிரடிப்படையினர் என மொத்தமாக 12,000 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.