பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் மாநாடு! - மக்ரோன் கலந்துகொள்ளவில்லை!!

14 ஆடி 2025 திங்கள் 10:15 | பார்வைகள் : 705
இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடு தொடர்பான மாநாடு ஒன்று ஐ.நா தலைமைச் செயலகத்தில் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் செல்லவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ஜனாதிபதி மக்ரோன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் வைத்து ‘இஸ்ரேல் பாலஸ்தீனம் - இரு நாடு தீர்வு’ என முழங்கியிருந்தார். அதன் எதிரொலி பிரித்தானியா முழுவதும் எதிரொலித்தது. பல்வேறு அமைச்சர்கள் மக்ரோனின் இந்த திட்டத்தை ஆதரத்து குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா தலைமைச் செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் இம்மாதம் 28-29 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மக்ரோன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன்படவில்லை. தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மக்ரோன் மாநாட்டில் கலந்துகொள்ளாதது ஏன் என்பது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.