உக்ரைனிற்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புகின்றார் டிரம்ப் - புட்டின் மீது கடும் விமர்சனம்

14 ஆடி 2025 திங்கள் 11:12 | பார்வைகள் : 271
அமெரிக்கா உக்ரைனிற்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவர் ருட்டேயுடனான சந்திப்பிற்கு முன்னதாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பலவகையா நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை நாங்கள் உக்ரைனிற்கு அனுப்பவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அதற்காக எங்களிற்கு 100 வீதம் செலுத்தப்போகின்றனர் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைனிற்கு மிகவும் அவசியமாக உள்ள பட்ரியட்களை அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புட்டின் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் அவர் நல்லவர் போல பேசுகின்றார் பின்னர் குண்டுகளை வீசுகின்றார்.
ஆகவே இது பிரச்சினையாக உள்ளது எனக்கு இது பிடிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.