Paristamil Navigation Paristamil advert login

முட்டை குழம்பு

முட்டை குழம்பு

14 ஆடி 2025 திங்கள் 11:45 | பார்வைகள் : 113


முட்டையை வேக வைத்து உண்ணுதல், வறுத்தல், முட்டை ஆம்லெட் என பல வகைகளில் முட்டை தயார் செய்து அனைவராலும் சுவைத்து உண்ணப்படுகிறது. அந்த வகையில் ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல்ல முட்டை சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி என குறித்து தெரிந்த்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
முட்டை - 34
பெரிய வெங்காயம் - 1
பழுத்த தக்காளி - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு தேவையானவை :
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு பற்கள் - 5
இஞ்சி - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையானவை :
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன
கிராம்பு - 1
பட்டை - 1/2 இன்ச்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
முதலில் முட்டையை வேகவைத்து அதன் ஓடுகளை நீக்கி பின் அவற்றை நீளவாக்கில் இரண்டாக வெட்டி எடுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் அரைக்க எடுத்து வைத்துள்ள துருவிய தேங்காய், கொத்தமல்லி விதைகள், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

வறுத்த அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கலந்து 4 முதல் 5 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
மசாலாக்களின் வாசனை போனவுடன் கரம் மசாலா மற்றும் இரண்டாக நறுக்கி வைத்துள்ள முட்டை துண்டுகளை போட்டு மேலும் 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள்.

இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை குழம்பு சாப்பிட ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்