Paristamil Navigation Paristamil advert login

காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் - மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்ட ஹமாஸ்

காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் - மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்ட ஹமாஸ்

14 ஆடி 2025 திங்கள் 13:12 | பார்வைகள் : 112


காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியை போலவே அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது.

திங்கட்கிழமை இரவு இஸ்ரேலியஇராணுவவீரர்கள் குழு ஒன்று எல்லை வேலியில் இருந்து ஒரு மைல் தொலைவில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்தும் பாதையைக் கடந்து சென்றபோது ஒரு குண்டு வெடித்தது.

தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இது தீவிர ஆர்த்தடாக்ஸ் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவான நெட்சா யெஹுதா பட்டாலியனின் துருப்புக்களை துடைத்தெறிந்தது.

இரண்டாவது குண்டு வெடித்தபோது மேலும் பல இஸ்ரேலியப் படைகள் அவர்களுக்கு உதவ விரைந்தன அதுவும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மூன்றாவது குண்டு வெடித்தபோது அருகில் மறைந்திருந்த ஹமாஸ் படையணி சிறிய ரக துப்பாக்கிச் சூடு மழை பொழிந்தது.

சில நிமிடங்களுக்குள் ஐந்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் சிலர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட்டிலிருந்து எளிதாகத் தெரியும் காசாவின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனூன் நகரில் இந்தத் தாக்குதல் நடந்தது.

24மணிநேரத்திற்கு முன்னர் குண்டுகளை புதைத்தது என்பதும் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ள அவர்கள் தயாராகயிருந்ததும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது . அவர்கள் இஸ்ரேலிய எல்லைக்கு மிக அருகில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்தில் செயல்படுவதாக இஸ்ரேலிய படையினர் கருதுகின்றனர்.

இந்த போர்க்காலம் முழுவதும் இஸ்ரேலிய படையினர் பலமுறை காசாவிற்கு மீண்டும் மீண்டும் செல்லவேண்டியிருந்தது - ஏனென்றால் இஸ்ரேல் தான் ஹமாசினை அகற்றியதாக தெரிவித்த பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டதே இதற்கான காரணம்.

ஹமாசின் சமீபத்தைய தொடர் தாக்குதல்கள் அந்த அமைப்பை அழிக்கும் இஸ்ரேலின் இலக்கு மிகவும் கடினமானதாக இலகுவில் சாத்தியப்படாததாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை ஹமாஸ் போராளிகள் கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ பொறியியல் வாகனத்தை குறிவைத்து ரொக்கட் மூலம் ஏவப்படும் குண்டுகளை வீசி ஓட்டுநர் தப்பி ஓட முயன்றபோது வாகனத்தை தாக்கினர்.

இது ஹமாஸ் வெளியிட்ட தாக்குதலின் வீடியோவில் காணப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி அவர்கள் இஸ்ரேலிய இராணுவீரரை கடத்த முயன்றனர் . இந்தச் செயல்பாட்டில் அவர் கொல்லப்பட்டார். அந்த முயற்சி அப்பகுதியில் செயல்படும் இஸ்ரேலியப் படைகளால் முறியடிக்கப்பட்டது.

காசாவின் கொடூரமான கடுமையான போர் ஈரானில் இஸ்ரேலின் விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையுடன் கடுமையாக வேறுபடுகிறது . 12 நாள் இஸ்ரேல்-ஈரான் மோதல் முடிவடைந்ததிலிருந்து காசாவில் குறைந்தது 19 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்தெரிவிக்கின்றன இதில் பெய்ட் ஹனூன் தாக்குதல் அடங்கும்.

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த நாளில் தெற்கு காசாவில் ஒரு ஹமாஸ் போராளி வெடிக்கும் பொருளை இஸ்ரேலின் இராணுவவாகனத்தின் மீது வீசி எறிந்தார்.இருந்த ஏழு வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் காசாவில் ஐ.டி.எஃப்-க்கு பல மாதங்களில் நடந்த மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகும்.

போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் 20000 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக ஜனவரி மாதம் முன்னாள் ஐ.டி.எஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறினார்.

இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரையும் படுகொலை செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் புதிய போராளிகளையும் சேர்த்துக் கொண்டதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறினார் அவர்களின் அணிகளை மீண்டும் நிரப்பினார். மார்ச் மாதத்தில் இஸ்ரேலின் பொது ஒளிபரப்பான கான் நியூஸ்இ ஹமாஸ் "நூற்றுக்கணக்கான" புதிய போராளிகளை சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது.

ஐ.டி.எஃப்-இன் செயல்பாட்டு இயக்குநரகத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இஸ்ரேல் ஜிவ் கூறுகையில் காசாவின் நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பில் எஞ்சியிருப்பதைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தக்கூடிய தளர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட போராளிக் குழுக்களின் குழு மட்டுமே எஞ்சியுள்ளது.

ஐ.டி.எஃப் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஹமாஸுக்கு நேரம் கிடைத்துள்ளது மேலும் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஜிவ் சி.என்.என்-க்கு தெரிவித்தார்.

“அவர்களின் போர் நமது பலவீனங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதேசத்தைப் பாதுகாப்பதில்லை - அவர்கள் இலக்குகளைத் தேடுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் படையினரின் பலவீனங்களை ஹமாஸ் பயன்படுத்த அனுமதித்துள்ளது என என்று ஜிவ் கூறினார்.

"ஹமாஸ் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது - அது சிறிய குழுக்களாக செயல்படும் ஒரு கெரில்லா அமைப்பாக மாறியுள்ளது. அது ஏராளமான வெடிபொருட்களைக் கொண்டுள்ளது அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேல் அங்கு வீசிய வெடிமருந்துகளிலிருந்து வந்தவை. என்று ஷிவ் கூறினார்.

 

நன்றி virakesari

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்