26 கல்லறைகளுக்கு நடுவில் இருக்கும் ஹொட்டல்.., இங்கு உணவருந்தினால் அதிர்ஷ்டமாம்

14 ஆடி 2025 திங்கள் 13:12 | பார்வைகள் : 117
26 கல்லறைகளுக்கு நடுவில் இருக்கும் உணவகத்தில் சாப்பிட்டால் அதிர்ஷ்டம் என்று நம்பப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத் நகரின் லால் தர்வாசா பகுதியில் 26 கல்லறைகளின் மத்தியில் லக்கி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் உள்ளூர் மக்களும், பல பிரபலங்களும் உணவருந்த வருகின்றனர்.
முக்கியமாக, கல்லறைகளுக்கு நடுவில் உணவகம் இருப்பதால் மக்கள் சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இங்கு சாப்பிட்டால் அதிர்ஷ்டம் எனவும் நம்பப்படுவதால் நாள் முழுவதும் உணவகம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இங்கு, பிரபல ஓவியர் எம்.எப் ஹுசைன் மற்றும் ராகுல் காந்தி எம்.பி. ஆகியோர் டீ குடித்துள்ளனர். இந்த உணவகமானது 1950-ம் ஆண்டு முகமது பாய் என்பவரால் நிறுவப்பட்டது.
இங்குள்ள ஊழியர்கள் கல்லறைகளில் பூக்களைத் தூவி ஒவ்வொரு நாளும் பதேஹா ஓதுவார்கள். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூட்டம் அலைமோதும்.
இந்த உணவகம் இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையின் சின்னம் என்றும் சொல்லப்படுகிறது.