Paristamil Navigation Paristamil advert login

தீயிலிருந்து ஆறு பேரை காப்பாற்றிய வீரருக்கு தேசிய மரியாதை!!!

தீயிலிருந்து ஆறு பேரை காப்பாற்றிய வீரருக்கு தேசிய மரியாதை!!!

14 ஆடி 2025 திங்கள் 15:53 | பார்வைகள் : 5336


பரிஸில் வசிக்கும் 39 வயதான வரவேற்பு பணியாளர் ஃபுசெய்னூ சிசே (Fousseynou Cissé), ஜூலை 4ஆம் தேதி, 18வது வட்டாரத்தில் ஏற்பட்ட தீயிலிருந்து இரண்டு குழந்தைகள், இரண்டு பிள்ளைகள் மற்றும் அவர்களது தாய்மார்களை என ஆறு பேரின் உயிரை போராடி காப்பாற்றினார். 

புகைமூட்டில் சிக்கியிருந்த மக்களை, கட்டிடத்தின் ஜன்னல்களுக்கு இடையில் சமநிலையை பேணிச் சென்று அவர் பக்கத்து அறைக்கு பாதுகாப்பாக மாற்றினார். இந்த வீர செயல் சமூக ஊடகங்களில் பரவலாக பாராட்டப்பட்டது.

இதனையடுத்து, ஃபுசெய்னூ சிசேவுக்கு பரிஸ் மாநகர மேயரிடம் இருந்து "Grand Vermeil" பதக்கம், காவல்துறை ஆணையரிடம் இருந்து "துணிச்சல் பதக்கம்" வழங்கப்பட்டது. அவரது தைரியத்தை கௌரவிக்கும் விதமாக, ஜூலை 14 தேசிய தின அணிவகுப்பில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் சிறப்பு அழைப்புடன் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டார். 

மேலும், அவருக்கு நிரந்தரப் பதவி மற்றும் பிரெஞ்சு குடியுரிமைக்கான உதவிகளும் வகுக்கப்பட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்