28 காவல்துறையினர் காயம்! - 389 கைதுகள்!!

14 ஆடி 2025 திங்கள் 17:58 | பார்வைகள் : 1004
தேசிய நாள் நிகழ்வுக்கு அச்சுறுத்தலாக இருந்த 389 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது இடம்பெற்ற மோதலில் 28 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். மொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கோடு செயற்பட்டவர்கள், மோட்டார் பட்டாசுகள், C மற்றும் D பிரிவு ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டவர்களில் 313 பேர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இல்-து-பிரான்சுக்குள் மட்டும் 176 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் 53,000 பாதுகாப்பு வீரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இன்று காலை முதல் 65,000 வீரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.