சிறையில் இருந்து நூதன முறையில் தப்பித்த கைதி.. - மார்செய்யில் சிக்கினார்!!
.jpg)
15 ஆடி 2025 செவ்வாய் 07:28 | பார்வைகள் : 5198
லியோன் நகரின் Corbas சிறைச்சாலையில் இருந்து நூதன முறையில் தப்பிச் சென்ற கைதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு மார்செய் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Lyon-Corbas (Rhône) சிறைச்சாலையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை கைதி ஒருவர் தப்பித்திருந்தார். சிறைச்சாலைகளில் கழிவு அகற்ற பயன்படுத்தப்படும் பெரிய் அளவிலான பை ஒன்றுக்குள் மறைந்திருந்து, குப்பையோடு குப்பையாக சிறைச்சாலையை விட்டு வெளியேறியிருந்தார்.
பின்னர் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று ஜூலை 14, திங்கட்கிழமை இரவு 10 மணி அளவில் Marseille இல் உள்ள Saint-Charles தொடருந்து நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
Elyazid A என பெயர் குறிப்பிடப்படும் 20 வயதுடைய ஒருவர் குறித்த கைதியாவார். அவர் Mayotte தீவில் பிறந்த அவர் சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் கடத்தில் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025