Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு படகுகள் மீட்பு.. 74 அகதிகள்!!

பல்வேறு படகுகள் மீட்பு.. 74 அகதிகள்!!

15 ஆடி 2025 செவ்வாய் 08:28 | பார்வைகள் : 4102


 

அகதிகளை கட்டுப்படுத்தும் பாரிய திட்டங்களை பிரித்தானியாவும் - பிரான்சும் இணைந்து மேற்கொண்டு வரும் நிலையில், அகதிகளின் படகுப்பயணம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

வடக்கு கடற்கரை பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பல்வேறு படகுகள் அகதிகளை ஏற்றியபடி சென்றுள்ளது. குறிப்பாக Blériot-Plage (Pas-de-Calais) கடற்கரை நகரத்தில் இருந்து 41 அகதிகளுடன் ஒரு படகும்,.  Hemmes de Marck (Pas-de-Calais) பகுதியில் இருந்து 26 அகதிகளுடன் ஒரு படகும் புறப்பட்டு பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளன.

அவர்களை கடற்படையினர் தடுத்து நிறுத்தி அவர்களை மீண்டும் கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

குழந்தைகள் பெண்கள் உட்பட மொத்தமாக 74 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்