Paristamil Navigation Paristamil advert login

அபாயம் : 10 மாவட்டங்களில் காட்டுத்தீ!!

அபாயம் : 10 மாவட்டங்களில் காட்டுத்தீ!!

15 ஆடி 2025 செவ்வாய் 09:28 | பார்வைகள் : 508


 

இன்று ஜூலை 15, செவ்வாய்க்கிழமை நாட்டின் 10 மாவட்டங்களுக்கு காட்டுத்தீ அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Deux-Sèvres, Vienne, Indre, Loir-et-Cher, Sarthe, Maine-et-Loire, Loire-Atlantique, Var, Bouches-du-Rhône மற்றும் Vaucluse ஆகிய பத்து மாவட்டங்களிலும் காட்டுத்தீ பரவு அபாயம் உள்ளதாகவும், குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த எச்சரிக்கை தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு Arbois, Castillon, Chaîne des Côtes, Collines de Gardanne, Côte Bleue, Étoile, Lançon, Les Roques, Montaiguet, Pont de Rhaud, Quatre Termes, Regagnas, Sainte-Victoire , Sulauze போன்ற மலைகள் காடுகளுக்குள்ளும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்