Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து- 09 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து- 09 பேர் உயிரிழப்பு

15 ஆடி 2025 செவ்வாய் 12:37 | பார்வைகள் : 211


அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மூன்று மாடி முதியோர் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய முதியவர்கள் ஜன்னல்கள் அருகே ஒடிவந்து உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார்கள்.

"நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்," “நான் என்னை படைத்தவரை சந்திக்கப் போகிறேன் என்று நினைத்தேன்.”

 "என் வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. என்னால் மூச்சு விட முடியாமல் போனது " என குளியலறை ஜன்னலிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட லோரெய்ன் ஃபெரார தெரிவித்துள்ளார்.

50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் மீட்பு பணிகள் கடினமானதாக இருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

70 வயது பெண்மணி மற்றும் 77 வயது ஆண் என இரண்டு பேர் இன்னும் பெயரிடப்படவில்லை, அவர்களது உறவினர்களின் அறிவிப்பு நிலுவையில் உள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து தீயணைப்பு வீரர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்