ஜனாதிபதி செயலகம் முன் வடக்கில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்

15 ஆடி 2025 செவ்வாய் 15:37 | பார்வைகள் : 182
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பொது மக்களே இந்தப் போராட்டம்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம்,
விடுதலைப் புலிகள் இனி ஒருபோதும் வரப்போவதில்லை என கூறும் படையினரிடம், அதி உயர் பாதுகாப்பு வலையங்களை ஏன் வைத்திருக்கின்றீர்கள் என்பதற்கு பதிலில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வடக்கில் உள்ள பொது மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், அங்குள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிப்படவில்லை.
இது வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்நிலையிலேயே இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றார்.