சமூக வலைத்தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை சரிபார்க்கும் பரிசோதனை!!!

15 ஆடி 2025 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 4334
ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கிய புதிய செயலி, இணையத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் டென்மார்க் ஆகிய ஐந்து நாடுகளில் சோதிக்கப்பட உள்ளது.
இந்த செயலி, வயதை நிரூபிக்கப் பயன்படும்; பயனர் தனது அடையாள ஆவணத்தை புகைப்படமாக கொடுத்து, 18 வயதுக்கு மேல் இருப்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், இணைய தளங்களுக்கு அந்த ஆவண விவரங்கள் எதுவும் தெரியாது; அவர்கள் பெறுவது, பயனர் வயதில் பெரியவர் என்ற உறுதிப்படுத்தல் மட்டுமே.
இந்த முறையின் முக்கிய நோக்கம் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது. சமூக வலைதளங்கள் மற்றும் ஆபாச தளங்களை அணுக வயது வரம்புகள் அமுல்படுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுப்பதுமாகும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த செயலி, 2026ல் அறிமுகமாகும் ஐரோப்பிய டிஜிட்டல் அடையாளத் திட்டத்துடன் இணைக்கப்படலாம். மேலும் இது ஆபாச தளங்களுக்கு மட்டுமல்லாமல், மதுபான விற்பனை போன்ற வயது வரம்பு உள்ள சேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்த வசதியை, பிரான்ஸ் அரசு ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025