Paristamil Navigation Paristamil advert login

கலேயில் புலம்பெயர்ந்தோர் ஒருவர் கனரக வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

கலேயில் புலம்பெயர்ந்தோர் ஒருவர் கனரக வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு!

15 ஆடி 2025 செவ்வாய் 16:53 | பார்வைகள் : 1068


Pas-de-Calais பகுதியில் மார்க்கில் உள்ள தொழில்துறை பகுதியில் (industrielle de Marck), இன்று ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில், புலம்பெயர்தவர் ஒருவர் கனரக வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துதள்ளார். தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவ குழு அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

2025 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் மட்டும் 20,500க்கும் மேற்பட்ட குடியேற்றவர்கள் மான்ச் (la Manche) நீரிணையை கடந்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 48% அதிகமாகும். 

பிரான்ஸ்–பிரிட்டன் இடையேயான புதிய ஒப்பந்தத்தின் படி, சட்டவிரோதமாக பிரிட்டனை அடைந்த குடியேறியவர்களை திருப்பி அனுப்பும்போது, அதற்குப் பதிலாக நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஒரு குடியேற்றவாசியை பிரிட்டன் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்