Paristamil Navigation Paristamil advert login

வியட்நாமில் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை

வியட்நாமில் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை

15 ஆடி 2025 செவ்வாய் 17:37 | பார்வைகள் : 291


வியட்நாமில், பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்நடவடிக்கை எடுப்பட்டுள்ளது.

ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் ஹானோய், உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக உள்ளது.

காற்று மாசை குறைப்பதற்காக, வியட்நாமும் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அடுத்தாண்டு ஜூலை முதல் ஹானோய் நகரில், பெட்ரோலில் இயங்கும் பைக்குகளுக்கும், ஒரு சில கார்களுக்கும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்