இரண்டு பொது விடுமுறைகள் இரத்து..?! - பிரதமர் புதிய திட்டம்!!

15 ஆடி 2025 செவ்வாய் 17:20 | பார்வைகள் : 1653
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவும், 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 40 பில்லியன் யூரோக்கள் சேமிக்கவும் பல்வேறு திட்டங்களை பிரதமர் பிரான்சுவா பெய்ரூ இன்று முன்மொழிந்தார்.
அதில் பிரெஞ்சு மக்கள் அதிகம் உழைக்கவேண்டும் என தெரிவித்து, இரண்டு பொது விடுமுறைகளை நீக்குவது தொடர்பில் ஆலோசனை ஒன்றை முன்மொழிந்தார்.
அதன்படி, மே 8 தினத்தையும், ஈஸ்ட்டர் திங்கள் விழுமுறையையும் நீக்குவதற்குவதற்குரிய முன்மொழிதலை பிரதமர் தெரிவித்தார். இந்த இரு நாட்களும் ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களும் உழைத்தால் பல பில்லியன் யூரோக்கள் மேலதிகமாக கொண்டுவரமுடியும் எனவும் பிரான்சுவா பெய்ரூ அறிவித்தார்.
இந்த முன்மொழிவு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது.