ஓய்வூதிய அதிகரிப்பு, சமூக கொடுப்பனவு.. அனைத்துக்கும் சிக்கல்!!

15 ஆடி 2025 செவ்வாய் 18:20 | பார்வைகள் : 1413
2027 ஆம் ஆண்டில் 40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பது அரசில் திட்டம். அதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் இன்று முன்மொழிந்தார்.
அதன் ஒரு அங்கமாக 2026 ஆம் ஆண்டில் ‘வெற்று ஆண்டு’ (année blanche) ஆக அமையும் என பிரதமர் அறிவித்தார். அதன்படி, சமூகநலக்கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் என எவ்வித கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படமாட்டாது என பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அறிவித்தார்.
சேமிப்புக்காக இந்த கொடுப்பவு அதிகரிப்பு நிறுத்தப்பட்டாலும், இவ்வருடத்தில் வழங்கப்படும் அதே தொகை அடுத்த ஆண்டிலும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 7 பில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் செலவழிக்கும் தொகையில் ஒரு சதம் கூட அதிகமாக 2026 ஆம் ஆண்டில் செலவு செய்யாது என பிரதமர் அறிவித்தார்.