Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் - எச்சரிக்கும் டிரம்ப்!

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் - எச்சரிக்கும் டிரம்ப்!

16 ஆடி 2025 புதன் 08:08 | பார்வைகள் : 1612


ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர் “நாங்கள் இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த இருக்கிறோம்.

50 நாட்களில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் விதிக்கப்படும்.

புட்டின் மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். தான் சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக நான் அவரை நினைத்திருந்தேன். அவர் மிகவும் அழகாக பேசுவார்.

ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பேட்டரிகள் இடம்பெறும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்