மீண்டும் இணையும் பிரபுதேவா வடிவேலு நகைச்சுவைக் கூட்டணி…

16 ஆடி 2025 புதன் 13:14 | பார்வைகள் : 786
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.
அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான ஜாலியோ ஜிம்கானா படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.
இந்நிலையில் பிரபுதேவா தன்னுடைய வெற்றி நகைச்சுவைக் கூட்டணியான பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகியோர் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தை சாம் ரோட்ரிக்யூஸ் இயக்குகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025