இரண்டாவது முறையாக வட்டி வீதம் குறைக்கப்படுகிறது!!

16 ஆடி 2025 புதன் 16:25 | பார்வைகள் : 5513
Livret A சேமிப்புக்கணக்கிற்கான வட்டி வீதம் இவ்வருடத்தில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட உள்ளது.
பணவீக்கத்துக்கு ஏற்றால் போல் ஆண்டு தோறும் மாறுபடும் இந்த சேமிப்புக்கணக்கின் வட்டிவீதம் மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக Banque de France, இன்று ஜூலை 16, புதன்கிழகை அறிவித்துள்ளது.
அதை அடுத்து, வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் வட்டி வீதம் 2.4% சதவீதத்தில் இருந்து 1.7% வீதமாக குறைக்கப்பட உள்ளது.
முன்னதாக 3% சதவீதமாக இருந்த வட்டி வீதம் இவ்வருட பெப்ரவரியில் 2.4% சதவீதமாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.