எம்பாப்பே கொடுத்த €180 300 நன்கொடையால் CRS காவல்துறையினருக்கு சிக்கல்!!!

16 ஆடி 2025 புதன் 22:51 | பார்வைகள் : 2098
பிரான்ஸ் அணி வீரர் கிலியான் எம்பாப்பே, 2022 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு தனது பங்கேற்பு ஊதியத்தை பாதுகாப்பு பணியாற்றிய ஐந்து CRS காவல் துறையினருக்கும் சில அமைப்புகளுக்கும் நன்கொடை அளித்துள்ளார்.
இதில் நான்கு அதிகாரிகளுக்கு தலா 30,000 யூரோ க்கள் மற்றும் அவர்களது தலைவர் 60,300 யூரோக்களை பெற்றதாகவும் Tracfin ஆவணம் தெரிவிக்கிறது. மொத்தமாக 180,300 யூரோக்களை நன்கொடை வழங்கியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை உள்துறை விசாரணை பிரிவு (IGPN) நிர்வாக விசாரணை தொடங்கியுள்ளது. எம்பாப்பேவின் தரப்பு இது சட்டப்படி செய்ததாக விளக்கம் அளித்துள்ளது.
கமாண்டர் S., எம்பப்பேவுடன் கமெரூன் (Cameroun) மற்றும் வோக்லூசில் (Vaucluse) பயணித்ததாகவும், அந்த பயணங்கள் அதிகாரப்பூர்வமானது எனவும் கூறப்படுகிறது. அவர் சம்பளமின்றி அந்த பயணங்களில் பங்கேற்றதாக பதிலளித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் நன்கொடை பெற்றது எந்த நிபந்தனையுமின்றி வேலை செய்யும், அவர்களின் நம்பிக்கைக்கும் சேவைக்கும் கிடைத்த பாராட்டாகும். விசாரணை தொடர்கிறது.