அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா...?
21 தை 2022 வெள்ளி 04:26 | பார்வைகள் : 8990
பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது. இதனை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும்.
தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.
பிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். இதற்கு கரணம் அவை வளரும் பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும்.
பிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.
பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும்.