மணிக்கு 22,500 கி.மீ வேகம்.. பூமியை கடக்கும் ராட்சத விண்கல்! எச்சரிக்கும் நாசா

17 ஆடி 2025 வியாழன் 05:59 | பார்வைகள் : 124
வாஷிங்டன்: நாளை '2022 YS5' என்ற விண்கல், பூமிக்கு மிக அருகில் வர உள்ளது.
சுமார் 120 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 22,500 கிமீ வேகத்தில் பூமியை கடந்து செல்லும் என்றும், இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் அது பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த விண்கல் சுமார் 4.15 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை செல்லும். பூமியில் இருக்கும் நமக்கு இது மிகப்பெரிய தூரமாக தெரியலாம்.
ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது நெருக்கமானதாக கருதப்படுகின்றது.
இதன் வேகமும் மற்றும் தூரமும், இந்த விண்கல்லை நிச்சயம் கண்காணிக்க வேண்டும் என்கிற நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
விண்கல் 2022 YS5-ன் அளவு மற்றும் வகை
நாசாவின் CNEOS மையத்தின் தகவலின்படி, '2022 YS5' விண்கல் சுமார் 10 மாடி கட்டிடத்தின் சைஸ் இருக்கும். ஆனால், இது "சாத்தியமான ஆபத்தான" விண்கல்லாக வகைப்படுத்தப்படுவதற்கு போதுமான அளவுக்கு பெரியதாக இல்லை.
அதாவது இது பூமியின் மீது மோதினால் பேரழிவு ஏற்படாது. சிற அளவில் பாதிப்புகள் இருக்கும்.
விண்கல்லின் பாதிப்பு மற்றும் கண்காணிப்பு
'2022 YS5' விண்கல்லால் நேரடியாக பாதிப்பில்லாதது என்றாலும், ஈர்ப்பு விசைகள் அல்லது சூரிய கதிர்வீச்சு போன்ற காரணிகளால் அதன் திசை காலப்போக்கில் மாறக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், பூமிக்கு அருகிலுள்ள பொருட்களை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியமாகிறது.
ஒரு விண்கல் 85 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டிருந்தால் மற்றும் பூமியிலிருந்து 7.4 மில்லியன் கிலோமீட்டருக்குள் சென்றால் மட்டுமே அதை "சாத்தியமான ஆபத்தான" என்று நாசா வகைப்படுத்தும். 2022 YS5 இந்த அளவுகோல்களுக்குள் வராததால், இது ஆபத்தானதாக கருதப்படவில்லை.
பெரும்பாலும் இந்த அளவிலான விண்கற்கள் தரையைத் தாக்குவதற்கு முன்பே வளிமண்டலத்திலேயே உடைந்து வெடிக்கும். இது "ஏர்பர்ஸ்ட்" எனப்படும்.
இப்படி உடையும் விண்கற்கள் பல இடங்களில் தாக்குதலை ஏற்படுத்தும். மட்டுமல்லாது வளிமண்டல வெடிப்பு ஒரு சக்திவாய்ந்த அதிர்ச்சி அலையை உருவாக்கும்.
இந்த அதிர்ச்சி அலை, ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர்களுக்கு பரவி, ஜன்னல்களை உடைக்கலாம்.
தலையில் இந்த கல் மோதினால் 1,200 அடி முதல் 2,400 அடி விட்டம் கொண்ட பள்ளத்தை உருவாக்கும்.
இதனால் நிலநடுக்கமும், கடலில் விழுந்தால் சுனாமியும் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன.