இஸ்ரேலின் அனைத்து செயல்களுக்கும் அமெரிக்கா துணை - ஈரான் குற்றச்சாட்டு

17 ஆடி 2025 வியாழன் 06:59 | பார்வைகள் : 303
இஸ்ரேலின் குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்கா துணை போகிறது என ஈரான் உச்சதலைவர் கொமெய்னி குற்றம் சாட்டினார்.
இது குறித்து, ஈரான் உச்ச தலைவர் கூறியதாவது: ஈரான் அதன் எதிரிகளுக்கு பலத்த அடி கொடுப்பதில் மிகவும் திறமை வாய்ந்தது.
அமெரிக்காவையும், இஸ்ரேலையும் எதிர்த்துப் போராடுவது பாராட்டத்தக்கது.
இஸ்ரேல் செய்யும் குற்றங்களுக்கு அமெரிக்கா துணை போகிறது. புதிதாக எந்த ஒரு இராணுவ தாக்குதலுக்கும் பதில் அளிக்க, ஈரான் தயாராக உள்ளது. இவ்வாறு ஈரான் உச்ச தலைவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலும், ஈரானும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடித்த மோதலுக்குப் பிறகு போர் நிறுத்தத்தை எட்டிய சில நாட்களுக்குப் பிறகு, ஈரான் தலைவர் கொமெய்னி இஸ்ரேலையும், அமெரிக்காவையும் கடுமையாக சாடி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.