காலையில் எழுந்ததும் கட்டாயம் செய்ய வேண்டியவை...

20 தை 2022 வியாழன் 09:03 | பார்வைகள் : 12300
காலையில் கண் விழிக்கும்போது உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கை, கால்களை நன்றாக நீட்டி சோம்பல் முறியுங்கள். இது சுறுசுறுப்புக்கு வித்திடும்.
அதிகாலையில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
படுக்கையில் இருந்து காலையில் எழுந்ததும் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது உடல் உள்உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
இரவில் சீரகம், வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்துவிட்டு அதனை காலையில் சாப்பிட்டு வரலாம். எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும்போதே இவற்றையும் நன்றாக மென்று சாப்பிட்டுவிடுவது நல்லது.
இரவில் நான்கைந்து பாதாம் பருப்புகளை ஊறவைத்துவிட்டு காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
காலையில் தண்ணீர் பருகிய பின் சிறிது நேரம் கழித்து கிரீன் டீ பருகலாம். அதனுடன் பிரெட்டும் சாப்பிடலாம்.
ஒரு டம்ளர் சூடான நீருடன் எலுமிச்சை சாறும், சிறிது தேனும் கலந்து பருகலாம். அல்லது பழ ஜூஸும் உட்கொள்ளலாம்.
காலையில் படிப்பது, கடினமான விஷயங்களை யோசிப்பது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். ஏனெனில் காலைப் பொழுதில் மூளை களைப்பு நீங்கி புத்துணர்ச்சியோடு இருக்கும்.
ஆரோக்கியமான உடல் நலத்தை பேணுவதற்கு காலை உணவு அவசியம். அன்றைய நாளை சோர்வின்றி இயங்கவும் வைக்கும். அதனால் ஒருபோதும் காலை உணவை தவிர்க்கக்கூடாது.
உடலியல் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு மதிய உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது அவசியம். மிகவும் தாமதமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அன்றாடம் உண்ணும் உணவு சமச்சீர் உணவாகவும் அமைந்திருக்க வேண்டும். ஏனெனில் சத்தான உணவு, மூளையின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். அதில் இரும்புச் சத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ரத்தசோகைக்கு ஆளாக நேரிடும்.a
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பிரான்சு, தொண்டைமண்டலம்
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1