எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை படைத்த விராட் கோலி

17 ஆடி 2025 வியாழன் 11:59 | பார்வைகள் : 379
ஐசிசி தரவரிசையில் விராட் கோலி யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான விராட் கோலி, 2024 T20 உலகக்கோப்பையை வென்றதும், T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடர் தொடங்கும் முன்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.
தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாட உள்ளார். இந்த நிலையில், ஐசிசி தரவரிசையில், யாரும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தரவரிசையில், விராட் கோலி 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தார்.
தற்போது, T20 போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலியின் புள்ளி 897 இல் இருந்து 909 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், ஒருநாள், டெஸ்ட் மற்றும் T20 என 3 வடிவத்திலும் 900 புள்ளிகள் பெற்ற வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
விராட் கோலி T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், சமீபத்தில் T20 தரவரிசையை திருத்திய ஐசிசி, விராட் கோலியின் முந்தையை செயல்பாடுகளை கணக்கில் கொண்டு, புள்ளிகளை அதிகரித்துள்ளது.