செனேகலில் இருந்து நிரந்தரமாக வெளியேறிய பிரெஞ்சு இராணுவம்!!

17 ஆடி 2025 வியாழன் 12:21 | பார்வைகள் : 2463
இன்றூ ஜூலை 17, வியாழக்கிழமையுடன் செனேகல் நாட்டில் இருந்து பிரெஞ்சு இராணுவம் முழுமையாக வெளியேறுகிறது.
செனேகல் சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இருந்தபோதும் அங்கு பிரெஞ்சு இராணுவம் கடந்த பல வருடங்களாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் இருந்து செனேகலில் இருந்து பிரெஞ்சு இராணுவம் படிப்படியாக வெளியேறி வந்திருந்தது. இந்நிலையில், இன்று ஜூலை 17 ஆம் திகதி வியாழக்கிழமை அங்கிருந்து இறுதி படை வெளியேறியுள்ளது.
ஆபிரிக்காவின் மாலி, பர்கினா ஃபசோ, நைகர், ஷட், கோபன் போன்ற பல்வேறு நாடுகளில் பிரெஞ்சு இராணுவத்தினரின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் இருந்தும் படிப்படியாக பிரெஞ்சு இராணுவம் வெளியேறி வருகிறது.