வீதிகளில் நெருக்கடி.. இந்த வார இறுதியிலும் சிவப்பு எச்சரிக்கை!!

17 ஆடி 2025 வியாழன் 13:21 | பார்வைகள் : 568
கடந்த வார வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பிரான்சின் வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவான நிலையில், நாளை ஜூலை 18 மற்றும் மறுநாள் ஜூலை 19 சனிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் மீண்டும் பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
விடுமுறைக்காக சுற்றுலா செல்வோரினால் இந்த நெரிசல் ஏற்படும் எனவும், வெளிச்செல்லும் வீதிகள் (Départs) மிக நீண்ட கிலோமீற்றர் தூரத்துக்கு நெரிசலைச் சந்திக்கும் எனவும் வீதி போக்குவரத்து அவதானிப்பாளர்களான Bison Futé அறிவித்துள்ளது.
இந்த இரு நாட்களுக்கும் ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் வழமைக்குத்திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.