பாஸ்தா

17 ஆடி 2025 வியாழன் 17:54 | பார்வைகள் : 228
பாஸ்தா என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்கள் பாஸ்தா வேண்டும் என எப்போது கேட்பார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி அவர்கள் கேட்கும்போது சட்டென சமைத்துக்கொடுக்க இந்த ஒன் பாட் பாஸ்தா ரெசிபி உங்களுக்கு உதவலாம். ரெசிபி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மக்கரோனி - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 5 முதல் 7
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
கசூரி மேத்தி - ¼ டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - ½ டீஸ்பூன்
மிளகு - ¼ டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 1 டேபிள் ஸ்பூன
கேரட் - 1, பீன்ஸ் - 5,
கேப்சிகம் - அரை
உப்பு
தண்ணீர் - 2 கப்
செய்முறை :
குக்கர் வைத்து எண்ணெய் உற்றுங்கள். காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். கண்ணாடி பதம் வந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக மசாலா வகைகள் அனைத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் தக்காள் கெட்சப் சேர்த்து வதக்குங்கள்.
பின் நறுக்கிய குடை மிளகாய் மற்றும் கேரட் சேர்த்து சற்று வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு உப்பு பார்த்துக்கொள்ளுங்கள்.
கொதித்து வரும்போது மகரோனியை சேர்த்து நன்கு கலந்துவிட்டு தட்டுப்போட்டு மூடி போட்டு 1 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
சில் இறங்கியதும் திறந்து கொத்தமல்லி தூவி கலந்து பரிமாறலாம். தேவைப்பட்டால் சுவைக்கு சீஸ் சேர்த்து கலந்துக்கொள்ளலாம்.