Rosny-sous-Bois : காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசு தாக்குதல்.. நால்வர் கைது!!

17 ஆடி 2025 வியாழன் 17:59 | பார்வைகள் : 637
Rosny-sous-Bois (Seine-Saint-Denis) நகர காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசுகள் வீசி தாக்குதல் மேற்கொண்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று ஜூலை 16, புதன்கிழமை இரவு 11.15 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்நிலையத்தில் சூழ்ந்துகொண்ட சிலர் காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசுகளை வீசினர். அத்தோடு குப்பைத்தொட்டிகளை எரித்துள்ளனர். காவல்நிலையம் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்துகளையும் சேதப்படுத்தினர்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்டது. நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.