Paristamil Navigation Paristamil advert login

Gare du Nord நிலையத்தில் பரபரப்பு.. பயணிகள் அவசர வெளியேற்றம்..!!

Gare du Nord நிலையத்தில் பரபரப்பு..  பயணிகள் அவசர வெளியேற்றம்..!!

17 ஆடி 2025 வியாழன் 23:28 | பார்வைகள் : 1252


 

Gare du Nord நிலையத்தில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஜூலை 17, வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. தொடருந்து நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் சந்தேகித்ததை அடுத்து, உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

4 ஆம் 5 ஆம் இலக்க மெற்றோக்களும், RER களில், B மற்றும் D சேவைகளும் தடைப்பட்டன.

பின்னர் தொடருந்து நிலையம் முற்றாக சோதனையிடப்பட்டு, பிரச்சனைகள் ஏதும் இல்லை என தெரியவந்ததுடன், பயணிகள்  அனுமதிக்கப்பட்டனர். சேவைகள் ஒன்றரை மணிநேர தாமதத்துடன் ஆரம்பமானது.

வர்த்தக‌ விளம்பரங்கள்