இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி என கூறி நிதி மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

18 ஆடி 2025 வெள்ளி 10:01 | பார்வைகள் : 176
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி என கூறி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர் குறித்து எச்சிரிக்கையாக இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர் இளம் தொழில்முனைவாளர்ளை அணுகி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து பண மோசடியில் ஈடுப்பட்டுவருவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
நிதியுதவியை எளிதாக்க மூன்றாம் தரப்பு முகவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும், மானிய விண்ணப்பங்கள் அல்லது கொள்முதல்கள், கேள்விப்பத்திரங்களைச் செயலாக்குவதற்கு தனி நபர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து பணம் கோருவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இவ்வாறான நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஏமாற்று செயல்கள் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.