வேட்டைத்துப்பாக்கியால் சுடப்பட்டு - 11 பேர் பலி!!

18 ஆடி 2025 வெள்ளி 11:17 | பார்வைகள் : 668
காட்டு விலங்கு வேட்டையாடப்படும் போது இடம்பெற்ற தவறுதலான துப்பாக்கிச்சூடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்ற 2024-2025 பருவகாலத்தில் (வேட்டையாட அனுமதிக்கும் காலத்தில்) மொத்தமாக 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முந்தைய பருவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக பதிவாகியிருந்தது. இதற்கு முந்தைய 25 ஆண்டுகளில் இதுபோன்ற எண்ணிக்கையில் மரணங்கள் பதிவானதில்லை.
காட்டு விலங்கு என நினைத்து தவறுதலாக சுடப்பட்டதில் பலியானவர்களின் எண்ணிக்கையே இதுவாகும்.
வேட்டைக்காரர்களுக்கு இது தொடர்பில் முறையான பயிற்சி வகுப்புகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.