Paristamil Navigation Paristamil advert login

டொரொன்டோவில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

டொரொன்டோவில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

18 ஆடி 2025 வெள்ளி 12:01 | பார்வைகள் : 1619


கனடாவின் டொரொன்டோ நகரிலுள்ள யோர்க்டேல் சொப்பிங் மால் Yorkdale Shopping Centre வாகனத் தரிப்பிடப் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மொன்ட்ரியாலைச் சேர்ந்த 28 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

காலை 6 மணியளவில் டுப்ரின் Dufferin வீதி மற்றும் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை அருகிலுள்ள பிரபலமான இந்த ஷாப்பிங் மாலில் துப்பாக்கி வெடித்தது குறித்து தகவல் கிடைத்ததும், பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் ஒரு நபர் மீட்கப்பட்டார்.

பின்னர் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக தெரிகிறது எனவும் இந்த நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படும்வரை அவருடைய பெயரை வெளிப்படுத்த முடியாது" எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது மால் திறக்கப்படவில்லை என Yorkdale ஷாப்பிங் மால் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்