பாக்கிஸ்தானில் தொடரும் கனமழை 170க்கும் அதிகமானவர்கள் பலி

18 ஆடி 2025 வெள்ளி 13:01 | பார்வைகள் : 230
பாக்கிஸ்தானில் தொடர் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்.
கடந்த 24 மணிநேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர் என பாக்கிஸ்தானின் தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலேயே மழை வெள்ளத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த மாகாணத்தில் கடும் மழை வெள்ளம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்துள்ளன வீதிகள் பாலங்கள் சேதமாகியுள்ளன.
ஜூன் 26 ம் திகதிக்கு பின்னர் 86 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என பாக்கிஸ்தானின் தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மழைவெள்ளம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சநிலையேற்பட்டுள்ளது.
சிறுவர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கும் நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்தை அதிகம் எதிர்கொள்கின்றனர் என மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பஞ்சாப் மாகாணத்தின் பல பகுதிகளில் அவசரகாலநிலையை அறிவித்துள்ள அதிகாரிகள் சில பகுதிகளில் இராணுவத்தினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள வயல்கள் வீதிகளின் வீடியோக்களை வெளியிட்டுள்ள பஞ்சாபின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை பொதுமக்கள் உயிருடன் மீட்கப்படும் அதிர்ச்சிகரமான படங்களை வெளியிட்டுள்ளது.
ராவல்பிண்டி மற்றும் அருகிலுள்ள தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறதுஇ பாகிஸ்தானின் வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படிஇ வியாழக்கிழமை பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மேலும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாபில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் வசிக்கும் மஹர் ஹம்மாத் வெள்ளத்தால் "கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக"சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
காய்கறிகள் விற்கும் தினசரி கூலித் தொழிலாளியான ஹம்மாத் வெள்ளம் தன்னை பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் கூறினார்.
அவரது வீட்டின் கூரை உடைந்து மழை காரணமாக தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
"எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நான் காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தேன் எல்லாமே தண்ணீரில் மூழ்கின. நான் ஒரு வேலைக்காரன் - 1000 ரூபாய் சம்பாதிக்க நாள் முழுவதும் வேலை செய்கிறேன்இ அதுவும் இப்போது நஷ்டத்தில் முடிகிறது" என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் ஏழு வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தண்ணீர் மருந்து மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகின்றன.
மனிதனால் ஏற்படும் காலநிலை நெருக்கடியில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது. 230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த நாடு இரண்டு சக்திவாய்ந்த வானிலை அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது - ஒன்று கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் ஏற்படுத்துகிறது மற்றொன்று இடைவிடாத பருவமழையை கட்டவிழ்த்து விடுகிறது.
"இது வெறும் 'மோசமான வானிலை' அல்ல - இது துரிதப்படுத்தும் காலநிலை நெருக்கடியின் அறிகுறியாகும்" என்று பாகிஸ்தான் செனட்டரும் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான ஷெர்ரி ரெஹ்மான் கூறினார். "