Paristamil Navigation Paristamil advert login

வல்லாரைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

வல்லாரைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

18 ஆடி 2025 வெள்ளி 13:59 | பார்வைகள் : 192


வல்லமை மிக்க கீரை என்பதாலே இதற்கு வல்லாரை என்று பெயர் பெறதாக முன்னோர்கள் கூறுவார்கள். அந்த அளவிற்கு இதில் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த வல்லாரைக் கீரை ஆரை வகைகளை சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. அதாவது ஆரை, புளியாரை மற்றும் வல்லாரை என்பதாகும். இந்த வல்லாரைக் கீரையின் சிறப்பு தெரிந்தோர் இந்த கீரை பார்த்தால் ஒருபோதும் வாங்கி சமைக்காமல் விட மாட்டார்கள். அப்படி இந்த கீரையின் சத்துக்கள் தெரிந்தால் நீங்களுமே இதை இனி விடமாட்டீர்கள். அவை என்னென்ன என்பது இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

வல்லாரைக் கீரையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இரும்புச் சத்து மிகுதியாக இருப்பதால் இரத்த சோகை பிரச்சனைக்கு மருந்தாக உள்ளது.

வாய்ப்புண்ணுக்கு வல்லாரை சாப்பிடு என்பார்கள். அந்த வகையில் வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் காலை மாலை என இருமுறை வல்லாரையை மென்று சாபிட்டுவர வாய்ப்புண் சரியாகும்.

குடல் ஆரோக்கியத்திற்கும் வல்லாரை சிறந்த பலனளிக்கிறது. குறிப்பாக குடல் புண், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வல்லாரை உதவுகிறது.

வல்லாரைக் கீரை பொடியை பயன்படுத்தி பல் துலக்கி வர பற்களில் உள்ள கறைகள் நீங்கும். அதோடு பற்களின் உறுதித் தன்மையும் பாதுகாக்கப்படும் என்கின்றனர்.

ஞாபகச் சக்திக்கும் வல்லாரைக்கீரையைதான் பரிந்துரைப்பார்கள். அந்தவகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வல்லாரைக்கீரையை சாப்பிடலாம். அதஒ தோசை மாவில் அரைத்தோ, சட்னியாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம். இவ்வாறூ சாப்பிடுவதால் உங்கள் மூளை சோர்வடையாமல் என்றூம் சுருசுருப்பாக இயங்கும்.

தொண்டைக்கட்டுதல், சளி, காய்ச்சல், உடல் சூடு, மூட்டு வலி, சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் வல்லாரைக்கீரையில் பலன் உண்டு. அவற்றை வாரம் ஒருமுறையேனும் சாப்பிட்டு வரலாம்.

வல்லாரைக்கீரையுடன் பாதாம் , ஏலக்காய், மிளகு, பணங்கற்கண்டு சேர்த்து மைய அரைத்து வெதுவெதுபான பாலில் கலந்து குடித்து வர இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராது என்று சொல்லப்படுகிறது.

வல்லாரைக்கீரையை காயவைத்து அதை பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு பாலில் கலந்து குடித்துவர வயிற்றில் உள்ள பூச்சி , நாடாப்புழுக்கள் இருக்காது என்று சொல்லப்படுகிறது. அதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும்.

கண்களின் ஆரோக்கியத்திற்கும் வல்லாரை பலனளிக்கிறது. அந்தவகையில் வல்லாரையை அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர கண் தொடர்பான பிரச்சனைகள் இருக்காது என்கின்றனர்.

வல்லாரைக்கீரையுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து அதை ஆறிய பின் தலையில் தேய்த்து பயன்படுத்தி வர முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

வல்லாரையை வதக்கி விளக்கெண்ணெயுடன் கலந்து சூடு கட்டி, வீக்கம் உள்ள இடத்தில் தடவிவர சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

வல்லாரையை துவையலாகவும் அரைத்து சாப்பிடலாம். உளுத்தம் பருப்பு, தேங்காய், காய்ந்தமிளகாய் வைத்து அரைத்து சாப்பிடலாம்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்