இடி மின்னல், மழை வெள்ளம் : 9 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

18 ஆடி 2025 வெள்ளி 17:39 | பார்வைகள் : 688
ஜூலை ஜூலை 19, சனிக்கிழமை நாட்டின் சில பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களும், மழை வெள்ள அனர்த்தமும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Calvados, Ille-et-Vilaine மற்றும் Manche ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு Ain, Allier, Isère, Loire, Puy-de-Dôme மற்றும் Rhône ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இடி மின்னல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள Calvados, Ille-et-Vilaine ,Manche ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இரவு 10 மணியில் பின்னர் மழை வெள்ளம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.