Paristamil Navigation Paristamil advert login

தினமும் தேங்காய் நார் தேய்த்துக் குளித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

தினமும் தேங்காய் நார்  தேய்த்துக் குளித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

4 தை 2022 செவ்வாய் 09:51 | பார்வைகள் : 9054


 சோப்புகள் இல்லாத காலத்தில் குளிக்கும்போது தேங்காய் நார் கொண்டு தான் உடல் முழுவதும் தேய்த்து, அழுக்குகளை நீக்குவார்கள். காலப்போக்கில் வாசனை நிறைந்த சோப்புகள் வந்ததும் அதை மறந்துவிட்டனர். இருப்பினும் சோப்பு பயன்படுத்தினாலும் நார் கொண்டு தேய்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் உடலளவிலும் பல மாற்றங்களை உணர்வீர்கள். நார் தேய்த்து குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 
 
இறந்த செல்கள் நீங்கும் : குளிக்கும்போது நார் கொண்டு தேய்ப்பதால், உடலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். சருமத் துளைகள் நீங்கி சருமம் சுவாசம் பெறும். இதனால் புதிய செல்கள் உருவாகி உடல் பொலிவு பெறும். சருமம் ஆரோக்கியமாகும்.
 
கிருமிகளை நீக்கும் : மாசுபாட்டால் சருமத்தை சிதைக்கக் கூடிய கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். நார் கொண்டு தேய்த்துக் குளிப்பதால் அவற்றை சருமத்திலிருந்து நீக்க முடியும். அதேபோல் உடல் வெளியேற்றும் கழிவுகள் சருமம் மூலமாக வெளியேறும்.அவை முற்றிலுமாக நீங்காவிட்டாலும் சரும நோய்கள் ஏற்படும். நார் கொண்டு தேய்த்தால் கழிவுகள் நீங்கி சருமம் இறுகும். கிருமிகளும் அண்டாது.
 
தசைகளைத் தூண்டும் : தசைகளின் இணைப்பைத் தூண்டி வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால் சருமத்தின் மூலமாக வெளியேறும் வளர்ச்சிதை மாற்றக் கழிவுகளையும் வெளியேற்றும்.
 
இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும் : உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதால் உடலில் ஒட்டுமொத்த உறுப்புகளுக்கும் இரத்தத்தின் பாய்ச்சல் அதிகரிக்கும்.
 
சருமம் பொலிவு பெரும் : நார் பயன்படுத்திக் குளிப்பதால், இயற்கையாகவே சருமம் மென்மைத் தன்மையை பெரும். நீங்கள் பார்லர் சென்று பெரும் பொலிவை இதிலேயே பெறலாம்.
 
 
செல்லுலைட் உற்பத்தி குறையும் : உடலில் கொழுப்புகள் ஆங்காங்கே தேங்கி நிற்பதைத்தான் செல்லுலைட் என்பார்கள். நீங்கள் நார் பயன்படுத்துவதால் தோலில் தேங்கி நிற்கும் கொழுப்புகள் கரைந்துவிடும். அதன் உற்பத்தியையும் தடுக்கும்.
 
உற்சாகத்தை அளிக்கும் : நாம் சாதாரணமாக கையில் தேய்த்துக் குளிப்பதற்கும், நார் கொண்டு தேய்த்துக் குளிப்பதற்கும் பல வித்யாசங்கள் இருக்கின்றன. நார் கொண்டு தேய்த்துக் குளிக்கும்போது முழுமையான புத்துணர்ச்சியை உணர முடியும். உடலும் உற்சாகமடையும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்