Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டியின்போது பார்த்த சிலை.... rue de la Chapelle வீதியில்..!!

ஒலிம்பிக் போட்டியின்போது பார்த்த சிலை.... rue de la Chapelle வீதியில்..!!

18 ஆடி 2025 வெள்ளி 21:20 | பார்வைகள் : 1370


ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாளின் போது 10 பெண்களின் தங்கசிலை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை ஞாபகம் இருக்கலாம்.. அவற்றில் ஒரு சிலை தற்போது rue de la Chapelle வீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பாராளுமன்ற துணை முதல்வரும், வழக்கறிஞருமான Gisèle Halimi இன் சிலையே அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு மீற்றர் உயரமான குறித்த தங்கமுலாம் பூசப்பட்ட சிலை, இன்று வெள்ளிக்கிழமை காலை அங்கு அமைக்கப்பட்டது. எவ்வாறாயினும் சிலை இன்னமும் திறக்கப்படவில்லை. இம்மாதம் ஜூலை 26 ஆம் திகதி குறித்த சிலை திறந்துவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, ஏனைய ஒன்பது பெண்களின் சிலைகளும் வெகு விரைவில் பரிசின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்