Paristamil Navigation Paristamil advert login

ஆறு வருடங்களின் பின்னர் நோர்து-டேமில் ஒலித்த காண்டாமணி!

ஆறு வருடங்களின் பின்னர் நோர்து-டேமில் ஒலித்த காண்டாமணி!

18 ஆடி 2025 வெள்ளி 22:20 | பார்வைகள் : 345


நோர்து-டேம் தேவாலயத்தில் உள்ள இராட்சத காண்டாமணிகளில் ஒன்று ஆறு ஆண்டுகளின் பின்னர் நேற்று வியாழக்கிழமை ஒலித்தது.

‘இம்மானுவேல்’ எனப்படும் இந்த 13.3 தொன் எடையுள்ள காண்டாமணி, நேற்று ஜூலை 17, வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு பெரும் அதிர்வுகளோடு ஒலித்தது. அந்த ஒலி அனைவரையும் சட்டென அமைதியாக்கி, தேவாலயத்தின் கூரை நோக்கி பார்க்க வைத்தது.

2019 ஆம் ஆண்டில் நோர்து-டேம் தேவாலயம் தீ விபத்துக்குள்ளானதின் பின்னர் தற்போதே இந்த இம்மானுவேல் காண்டாமணி ஒலிக்கிறது. திருத்தப்பணிகள் நிறைவடைந்து சென்ற வருட டிசம்பரில் தேவாலயம் திறக்கப்பட்டபோது, இம்மானுவேல் மற்றும் மேரி ஆகிய காண்டாமணிகள் தவிர்ந்த ஏனைய காண்டாமணிகளே ஒலிக்கவிடப்பட்ட்டிருந்தன.

இந்நிலையில், இம்மானுவேல் நேற்று ஒலிக்கவிடப்பட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தேவாலயத்தின் கூரை வடிவமைப்புக்குள் குறித்த காண்டாமணியில் ஒரு சத்தம் அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரை எதிரொலிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காண்டாமணி முதன்முறையாக 1686 ஆம் ஆண்டு நோர்து-டேம் தேவாலயத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்