Paristamil Navigation Paristamil advert login

தவறான ஊழியரை கடத்திய பின், தொலைபேசி கடையை கொள்ளையடித்த கும்பல்!!!

தவறான ஊழியரை கடத்திய பின், தொலைபேசி கடையை கொள்ளையடித்த கும்பல்!!!

18 ஆடி 2025 வெள்ளி 21:40 | பார்வைகள் : 1212


செல் நகரத்தில் (Chelles) வியாழன் காலை, இரண்டு கொள்ளையர்கள் தவறாக SFR கடைக்கு அடுத்த கடையின் ஊழியரை பணிக்கு வரும்போது, பின்புற நிலத்தடிப் பார்க்கிங்கில் அவரை சுருக்கப்பட்ட துப்பாக்கியுடன் மிரட்டி, கைகளை கால்களுடன் கட்டி, வாயில் சாக்ஸ் வைத்து, காரின் பின்புறத்தில் வைத்தனர். பின்னர், அவர் SFR கடை ஊழியர் அல்ல என்பது தெரிந்ததும், உண்மையான ஊழியரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அதன் பிறகு, உண்மையான SFR ஊழியர் வந்ததும், அவரையும் மிரட்டி, கடையின் பின்புற கதவையும் பாதுகாப்பு அறையையும் திறக்க வைத்துள்ளனர். அவரும் கட்டப்பட்டார், வாயில் பொருள் வைத்தும் மற்றும் அடித்தும் உள்ளனர். அதன் பின், கும்பல் கடையின் தொலைபேசி அனைத்தையும் கொள்ளையடித்து தப்பியுள்ளனர். இதுவரை சம்மந்தப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்