பிரான்சுவா பெய்ரூ வேண்டாம்! - கருத்துக்கணிப்பு!

18 ஆடி 2025 வெள்ளி 22:20 | பார்வைகள் : 430
தற்போது பிரதமராக உள்ள பிரான்சுவா பெய்ரூ அவர்கள் மாற்றப்படவேண்டும் என பத்தில் ஆறு பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரான்சுவா பெய்ரூ மீது 20% சதவீதமான மக்கள் மட்டுமே நன்மதிப்பு வைத்துள்ள நிலையில், Ipsos/BVA நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் 59% சதவீதமான மக்கள் பிரான்சுவா பெய்ரூ மாற்றப்படவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக புதிய வரசுசெலவுத்திட்டத்தில் 40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பதற்குரிய திட்டங்களை அவர் அறிவித்ததன் பின்னர் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதில் புதிய பிரதமர் மாற்றப்படவேண்டும் என 59% சதவீதமானவர்களும், அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் வைக்கப்படவேண்டும் என 44% சதவீதமானவர்களும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு இணையம் வாயிலாக 1,002 பேரிடம் ”quota method” மூலம் மேற்கொள்ளப்பட்டது.