சீனாவில் மாணவர்கள் உருவாக்கிய நீர் ராக்கெட்

19 ஆடி 2025 சனி 07:50 | பார்வைகள் : 278
சீனாவில் மாணவர்கள் உருவாக்கிய நீர் ராக்கெட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவானது தனது ராணுவ மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக விளங்கி வருகிறது.
சீனாவில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இரண்டு கட்ட நீர் ராக்கெட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், மாணவர்கள் குழு கோலா பாட்டில்களை பயன்படுத்தி உருவாக்கிய ராக்கெட், வெற்றிகரமாக பறந்து, பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்குகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் மாணவர்களின் புத்திசாலித்தனம், ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பத் திறனைப் பாராட்டி வருகின்றனர்.
அதில் ஓய்வுபெற்ற பொறியியல் ஆசிரியர் ஒருவர், "கடந்த 25 ஆண்டுகளில் 5000 நீர் ராக்கெட் ஏவுதல்களை நான் பார்த்திருக்கலாம். இது மிகவும் அருமையாக உள்ளது" என பாராட்டியுள்ளார்.
மற்றொரு இந்திய பயனர், " நமது நாட்டில் உள்ள இளையோர்கள் ரீல்கள் மற்றும் நடன வீடியோக்களை உருவாக்குவதில் மும்முரமாக உள்ள நிலையில், சீன மாணவர்களின் கல்வி வேறொரு தளத்தில் உள்ளது என வியப்பு தெரிவித்துள்ளார்.